Loading...
பங்கின் விலை வெறும் ₹17 தான்; 400 சதவீதம் கொடுக்கும் தபாரியா டூல்ஸ் நிறுவனம்; ரெக்கார்ட் தேதி எப்போது?
400 சதவீதம் கொடுக்கும் தபாரியா டூல்ஸ் நிறுவனம்

பங்கின் விலை வெறும் ₹17 தான்; 400 சதவீதம் கொடுக்கும் தபாரியா டூல்ஸ் நிறுவனம்; ரெக்கார்ட் தேதி எப்போது?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2026
06:44 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி கருவிகள் தயாரிப்பு நிறுவனமான தபாரியா டூல்ஸ் லிமிடெட், தகுதியுள்ள பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய அளவில் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. இதன்படி ₹10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கிற்கு 400 சதவீத அடிப்படையில் ₹40 லாப பங்காக வழங்கப்பட உள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் கிடைத்த ஈட்டக்கூடிய லாபத்திலிருந்து இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடைசி நாள்

லாப பங்கை பெற பங்கு வாங்குவதற்கான கடைசி நாள்

லாப பங்கை பெறுவதற்கான தகுதியுள்ள பங்குதாரர்களைத் தீர்மானிக்க வரும் நவம்பர் 12 ஆம் தேதியை ரெக்கார்டு தேதியாக நிறுவனத்தின் நிர்வாகக் குழு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் டி+1 (T+1) வர்த்தக நடைமுறை அமலில் உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் பலனைப் பெற வேண்டுமெனில் நவம்பர் 11 ஆம் தேதிக்கு முன்பாக பங்குகளை வாங்கியிருக்க வேண்டும்.

அன்றைய தினத்திற்குள் டீமேட் கணக்கில் பங்குகள் சேருபவர்கள் மட்டுமே இத் தொகைக்குத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

வலுவான நிதி நிலைமை

இரண்டாம் காலாண்டில் வலுவான நிதி நிலைமை மற்றும் லாப வளர்ச்சி

நடப்பு 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் தபாரியா டூல்ஸ் நிறுவனம் சிறப்பான நிதி முடிவுகளைப் பதிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 18.42 சதவீதம் உயர்ந்து ₹47.97 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்தில் இதன் லாபம் ₹40.50 கோடியாக இருந்தது.

மேலும் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹253.43 கோடியிலிருந்து ₹289.04 கோடியாக உயர்ந்து வலுவான வர்த்தக வளர்ச்சியை உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

முதலீட்டு அபாயங்கள்

பங்கு விலையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் முதலீட்டு அபாயங்கள்

லாப பங்கு அறிவிப்பைத் தொடர்ந்து நிறுவனத்தின் பங்கு விலை 4.99 சதவீதம் உயர்ந்து ₹17.89 என்ற அப்பர் சர்க்யூட் எல்லையைத் தொட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் இந்த பங்கு 541 சதவீத மாற்றத்தை அளித்துள்ளது.

இருப்பினும் பங்கின் பெரும்பகுதி நிறுவனர்களிடமே உள்ளன.

சந்தையில் வர்த்தகப் பங்குகள் குறைவாக உள்ளதால் எக்ஸ்-டிவிடெண்ட் நாளன்று பங்கு விலையில் கணிசமான விலை திருத்தம் ஏற்படும் என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT