NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சமீபத்திய RTO கொள்கைக்குப் பிறகு 70%க்கும் அதிகமான அமேசான் ஊழியர்கள் வெளியேறக்கூடும்: ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சமீபத்திய RTO கொள்கைக்குப் பிறகு 70%க்கும் அதிகமான அமேசான் ஊழியர்கள் வெளியேறக்கூடும்: ஆய்வு
    அதிகமான அமேசான் ஊழியர்கள் வெளியேறக்கூடும் என ஆய்வில் தகவல்

    சமீபத்திய RTO கொள்கைக்குப் பிறகு 70%க்கும் அதிகமான அமேசான் ஊழியர்கள் வெளியேறக்கூடும்: ஆய்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 30, 2024
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    பிளைண்ட் என்ற வேலை மறுஆய்வு தளத்தின் புதிய கருத்துக்கணிப்பில், 73% அமேசான் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவது பற்றி யோசித்து வருகின்றனர்.

    இது ஜனவரி 2025 இல் தொடங்கப்படவுள்ள ஐந்து நாள் கட்டாயமாக்கப்பட்டுள்ள அலுவலகத்திலிருந்து பணி செய்ய காட்டாயமாக்கிய தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியின் அறிவிப்பை அடுத்து சூடுபிடித்துள்ளது.

    2,585 சரிபார்க்கப்பட்ட அமேசான் நிபுணர்களிடமிருந்து பதில்களைப் பெற்ற இந்த கணக்கெடுப்பு, ஜாஸ்ஸி தனது அலுவலகத்திற்குத் திரும்புவதற்கான (ஆர்டிஓ) மெமோவை அனுப்பிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    அதிருப்தி

    பெரும்பாலான அமேசான் ஊழியர்கள் புதிய கொள்கையால் மகிழ்ச்சியடையவில்லை

    அமேசானின் பல நிறுவன ஊழியர்கள் புதிய கொள்கையில் மகிழ்ச்சியடையவில்லை என்று கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.

    பலர் புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுகிறார்கள் அல்லது அதைச் செய்யும் சக ஊழியர்களை அவர்கள் அறிவார்கள்.

    மேலும், இந்தக் கொள்கை மாற்றத்தின் காரணமாக அமேசானில் ஏற்கனவே வெளியேறிய ஒருவரைத் தங்களுக்குத் தெரியும் என்று கணக்கெடுக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கூறியுள்ளனர்.

    வேலை 

    அமேசான் ஊழியர்களிடையே 'Rage applying' போக்கு வெளிப்படுகிறது

    பிளைண்ட் ஆய்வில், அமேசான் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு தெளிவான "கோபத்தின்" போக்கு உள்ளது என கண்டறிந்துள்ளது.

    நிறுவன ஊழியர்கள் வேலை தேடலை சாதாரணமாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

    மாறாக அவர்கள் நெகிழ்வான பணியிடம் என குறிப்பிட்டு நேர்காணலை அணுகுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

    "ரேஜ் அப்ளையிங்" என்பது, மக்கள் தங்கள் தற்போதைய வேலைகளால் சலித்துவிட்டதால், வேறு சுவாரசியம் தரும் வேலைகளுக்கு விண்ணப்பங்களை இடுவது.

    தொழில் பாதிப்பு

    அமேசானின் கொள்கை தொழில்நுட்ப பணியாளர்களிடையே அச்சத்தை தூண்டுகிறது

    பிளைண்டின் கூற்றுப்படி, அமேசானின் பணியாளர்களில் 90% க்கும் அதிகமானோர் புதிய அலுவலகக் கொள்கையைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடையவில்லை.

    இது சில தீவிர ஊகங்களைத் தூண்டியுள்ளது மற்றும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் களத்தில் குதிக்கலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    பிளாக், கூகுள் மற்றும் AT&T போன்ற பெரிய பெயர்களைச் சேர்ந்த ஊழியர்கள், தொழில்நுட்ப உலகில் WFH முறையினை நிறுத்துவது குறித்து பிளைண்ட் மீது தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

    கொள்கை மாற்றம்

    டெல் அமேசானின் வழியை பின்பற்றுகிறது; 5 நாள் அலுவலக வேலைகளை கட்டாயமாக்குகிறது

    அமேசான் அறிவிப்புக்குப்பிறகு, டெல் நிறுவனமும், தனது விற்பனைக்குழுவை வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளது.

    இது அவர்களின் முந்தைய மூன்று நாள் தேவையிலிருந்து ஒரு முன்னேற்றம்.

    அமேசான் மற்றும் டெல் போலல்லாமல், நிறைய வணிகங்கள் WFH முறையை தழுவுகின்றன.

    Flex Indexஇன் சமீபத்திய ஆய்வில், 9,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அலுவலகத் தேவைகளைப் பார்த்து, கடந்த ஜனவரியில் இருந்து, மூன்றில் ஒருவர் மட்டுமே தங்களது கடுமையான ஐந்து நாள் அலுவலக வருகையில் ஒட்டிக்கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

    இப்போது, ​​37% முதலாளிகள் hybrid வேலை மாதிரிகளை கோருகின்றனர். இது 2023இன் தொடக்கத்தில் வெறும் 20% ஆக இருந்தது.

    தற்போது, ​​வெறும் 3% தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தங்கள் பணியாளர்கள் முழுநேர அலுவலகத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமேசான்

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    அமேசான்

    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  பிரிட்டன்
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  ஆப்பிள்
    சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!  நடிகர் சூர்யா
    ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை? ஃப்ளிப்கார்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025