NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கான ஏலத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங் பங்கெடுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கான ஏலத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங் பங்கெடுப்பு
    ஸ்பைஸ்ஜெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங்

    கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கான ஏலத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங் பங்கெடுப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    04:38 pm

    செய்தி முன்னோட்டம்

    குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் மற்றும் பிஸி பீ ஏர்வேஸ் இணைந்து, கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கான ஏலத்தை சமர்ப்பித்துள்ளதாக ஸ்பைஸ்ஜெட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

    பிஸி பீ ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், அஜய் சிங் தனது தனிப்பட்ட தகுதியில் ஏலத்தை சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்பைஸ்ஜெட், இந்த புதிய விமான சேவையின் செயல்பாட்டு பங்காளியாக செயல்படும் என்றும் அதன் ஊழியர்கள் மற்றும் சேவைகளை வழங்கும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    இந்த கூட்டாண்மையானது, இரு நிறுவனங்களின் பலத்தையும் ஒன்றிணைத்து, சிறந்த செலவு மேலாண்மை, அதிகரித்த வருவாய் மற்றும் இந்திய விமான சந்தையில் வலுவான நிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    ஏலம்

    வளர்ச்சி பாதையை திட்டமிட்டுள்ள ஸ்பைஸ்ஜெட்

    ஸ்பைஸ்ஜெட் மற்றும் புதிய ஏர்லைன்ஸ் இணைந்து செயல்படுவதன் மூலம், தங்கள் விமான அட்டவணைகள் மற்றும் இலக்குகளை மேம்படுத்தலாம், மேலும் பயணிகளை ஈர்க்கலாம் மற்றும் அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்யலாம்.

    ஸ்பைஸ்ஜெட் தனது வணிகத்தை புதுப்பிக்கும் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் இந்த ஏலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    ஏலத்திற்காக ஏற்கனவே பணத்தை திரட்டி இருப்பினும், மேலும் கூடுதலாக பணத்தை திரட்ட திட்டமிட்டுள்ளது.

    ஸ்பைஸ்ஜெட் தற்போது 744 கோடி ரூபாய் மதிப்பீட்டின் முதல் தவணையை நிறைவு செய்து, கூடுதல் சந்தாக்கள் ஒழுங்குமுறை ஒப்புதல் நிலுவையில் உள்ளது.

    மேலும் ரூ.1000 கோடியை திரட்டுவதற்கான நடவடிக்கையையும் நிறுவனம் தொடங்கியுள்ளது.

    ஸ்பைஸ்ஜெட் ஏற்கனவே QIP மூலம் ரூ. 2500 கோடி வரை பெறுவதற்கு பங்குதாரர் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா

    விமானம்

    விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்  விமான சேவைகள்
    சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    அமெரிக்காவில் நடுவானில் உயிரிழந்த விமானி; 279 பயணிகளுடன், விமானம் பத்திரமாக தரையிறக்கம் அமெரிக்கா
    ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விமான சேவைகள்

    விமான சேவைகள்

    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு விமானம்
    புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வணிகம்
    அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து அமெரிக்கா
    செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம்  ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025