ஒரே நாளில் 2,500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
இன்று (மார்ச் 19) இந்தியப் பங்குச் சந்தையில் விற்பனை அழுத்தம் அதிகரித்ததால், சென்செக்ஸ் 2,496 புள்ளிகள் (3.26%) சரிந்து 74,207 என்ற அளவிலும், நிஃப்டி 775 புள்ளிகள் சரிந்து 23,002 என்ற அளவிலும் நிலைபெற்றன. இந்தத் திடீர் சரிவால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் ₹13 லட்சம் கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். சந்தை வீழ்ச்சிக்குக் காரணமான முக்கிய காரணிகள் பின்வருமாறு:-
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $111 ஐத் தாண்டியுள்ளது. இந்தியா தனது தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி செய்வதால், எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற அச்சம் சந்தையை உலுக்கியுள்ளது. வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி, வங்கியின் மதிப்புகள் மற்றும் அறநெறிகள் தமக்கு உடன்பாடானதாக இல்லை எனக் கூறி பதவி விலகியது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் காரணமாக எச்டிஎஃப்சி பங்குகள் 5%க்கும் மேல் சரிந்தன. இது ஒட்டுமொத்த வங்கித் துறையையும் சரிவுக்குத் தள்ளியது.
அமெரிக்கா
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் நிலைப்பாடு
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் தற்போதைக்கு வாய்ப்பில்லை எனச் சமிக்ஞை காட்டியுள்ளது. இது உலகளாவிய பணப்புழக்கத்தைக் குறைத்து, இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறக் காரணமாகியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் இண்டிகோ பங்குகள் 3% சரிந்தன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் உலகளாவிய மந்தநிலை காரணமாகப் பாதிப்படைந்தன. எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
நிபுணர்கள்
நிபுணர்கள் கூறுவது என்ன?
கச்சா எண்ணெய் விலை $110க்கு மேல் நீடித்தால், அது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் போர் பதற்றம் தணியாத வரை சந்தை இதே போன்ற ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும் என்றும் சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கச்சா எண்ணெய் விலையின் நகர்வுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் சூழலே அடுத்த சில நாட்களுக்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும். ஏதேனும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்தால் மட்டுமே சந்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.