
4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி
செய்தி முன்னோட்டம்
தற்போது நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுவில், பிற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியான ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாமல் அப்படியே தொடர முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
கடந்த 2022 மே முதல், ரஷ்யா-உக்ரைன் பிரச்சினை, குறைவான உணவு விளைச்சல் எனப் பல்வேறு பொருளாதாரக் காரணிகளால், விலை உயர்வைக் கட்டுப்படுத்த ரெப்போ ரேட்டை அதிகரிக்கத் தொடங்கியது ரிசர்வ் வங்கி.
அப்போதிருந்து, இந்தாண்டு பிப்ரவரி மாதம் வரை, ஒட்டுமொத்தமாக 250 அடிப்படைப் புள்ளிகள் வரை ரெப்போ ரேட்டை உயர்த்தியது ரிசர்வ்.
பிப்ரவரி மாதத்திலிருந்து, அதில் எந்த மாற்றத்தையம் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. நடப்பு நிதியாண்டிற்கான நான்காவது நிதிக் கொள்கைக் குழுவிலும் ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாமல் 6.50%-மாகவே தொடர முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
embed
மாற்றம் செய்யப்படாத ரெப்போ ரேட்:
#RBIPolicy | RBI's Monetary Policy Committee decides to maintain status quo, #RepoRate is kept unchanged at 6.50% pic.twitter.com/wCh0lQ3YD7— CNBC-TV18 (@CNBCTV18Live) October 6, 2023