கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்
கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கார்டு வழங்குபவர்கள் கார்டு நெட்வொர்க்குகளுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடும் போது, மற்ற அட்டை நெட்வொர்க்குகளின் சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் ஒப்பந்தங்களை செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. பல அட்டை நெட்வொர்க்குகளில் இருந்து வாடிகளர்களுக்கு பிடித்த நெட்வொர்க்கை தேர்வு செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி கார்டு வழங்குபவர்களிடம் கூறியுள்ளது. ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள், அடுத்த முறை ரெநியூவல் செய்யும் போது, அவர்களுக்கு விருப்பமான நெட்வொர்க்கை தேர்வு செய்து கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்
ஏற்கனவே நெட்வொர்க்குகள் மற்றும் கார்டு வழங்குபவர்களுக்கு இடையே இருக்கும் சில ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: 1. அட்டை வழங்குபவர்கள் மற்ற அட்டை நெட்வொர்க்குகளில் இருந்து சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் ஒப்பந்தங்களில் நுழைவது தடுக்கப்படுகிறது 2. கார்டு வழங்குபவர்கள் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அட்டை வழங்கும் போது பல அட்டை நெட்வொர்க்குகளிலிருந்து வாடிகளர்களுக்கு பிடித்த நெட்வொர்க்கை தேர்வு செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டும். 3. ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால், அவர்கள் அடுத்த முறை அட்டையைப் புதுப்பிக்கும் போது இந்த விருப்பம் வழங்கப்படும்.