தபால் நிலையங்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதித்தது ரிசர்வ் வங்கி
மதிப்பை இழந்த 2,000 ரூபாய் நோட்டுகளை இன்னும் மாற்றாமல் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! இனி 2,000 ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்கள் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாணய பரிமாற்ற செயல்முறையை சீராக்குவதற்காக ரிசர்வ் வங்கி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் விவரங்களை ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQகள்) பிரிவில் பதிவிட்டுள்ளது. அதில் எப்படி தபால் நிலையங்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை ஏதேனும் ஒரு ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலத்திற்கு அனுப்பலாம் என்பது விளக்கப்பட்டுள்ளது.
தபால் நிலையம் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது?
அதற்காக, 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்புவது மிகவும் சிக்கலான வேலை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அருகில் உள்ள ஒரு தபால் நிலையத்திற்கு சென்று முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், 2000 ரூபாயை நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பினால் போதும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஆர்பிஐ இணையதளத்தில் எளிதாக பதிவிறக்கி கொள்ளலாம். ஆர்பிஐ இணையதளத்தில் உள்ள "Forms-Others" பிரிவின் கீழ் இந்த விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கின்றன. இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவங்கள் முழு பரிவர்த்தனையையும் எளிதாக்குகிறது. விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்: ஆதார் அட்டை போன்ற அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணத்தின்(OVD) நகல் வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு அறிக்கையின் நகல்