பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியுடனான ஒப்பந்தங்களை நிறுத்தியது பேடிஎம்
பேடிஎம் மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி யூனிட் ஆகியவை தங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களை நிறுத்த பரஸ்பரம் ஒப்புக்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 'ஒன் 97 கம்யூனிகேஷன்' என்று முறையாக அழைக்கப்படும் பேடிஎம், எந்த மாதிரியான ஒப்பந்தங்கள் நிறுத்தப்படுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை. பேடிஎம்மை சாராமல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்படுவதை ஆதரிப்பதற்காக பேடிஎம்முடனான ஒப்பந்தத்தை எளிமைப்படுத்த பேமெண்ட்ஸ் வங்கி ஒப்புக்கொண்டது" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் 51% பங்குகளை வைத்திருக்கிறார். மீதமுள்ளவை பேடிஎம் உடையதாகும்.
ஒப்பந்தம் இல்லாமல் தனித்து செயல்பட முடிவு
சில நாட்களுக்கு முன், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிறுவன தலைவர் விஜய் சேகர் ஷர்மா, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சமீபத்தில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது டிஜிட்டல் வாலட், டெபாசிட்கள் மற்றும் கிரெடிட் தயாரிப்புகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம்மிடம் கேட்டுக் கொண்டது. இதனால், அந்நிறுவனம் பெரும் பின்னடைவுளை சந்தித்து வருகிறது. எனவே, பேடிஎம் மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று சாராமல் செயல்பட்டால், ஒரு குழுவின் பிரச்சனைகளை மற்றொன்றை பாதிக்காது என்பதற்காக அந்த இரண்டு பிரிவுகளும் தங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களை நிறுத்திவிட்டு, தனித்து செயல்பட முடிவு செய்துள்ளன.