Page Loader
பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர் 
பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர்

பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர் 

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 28, 2023
06:14 pm

செய்தி முன்னோட்டம்

பங்குச்சந்தை மற்றும் முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்கள் கண்டிப்பாக காம்பவுண்டிங்கைப் (Compounding) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது, தொடர்ந்து ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து கொண்டே வரும் போதோ அல்லது ஒரு பெரிய தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்திருக்கும் போதோ அது பல்கிப் பெருகுவதையே காம்பவுண்டிங் என்கிறார்கள். முதல் சில பத்தாண்டுகளுக்கு சிறிய முதலீடு மற்றும் லாபமாகத் தெரியும் பணம், அதற்குப் பிறகு மிக வேகமாக பெருகி நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நமக்கு லாபத்தைத் தரும். ஒழுக்கம் மற்றும் பொறுமை ஆகியவற்றையே காம்பவுண்டிங்கின் தாரக மந்திரமாகக் கூறுவார்கள். உலக பணக்காரர்களுள் ஒருவரான வாரன் பஃப்பட்டும், மறைந்த இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளாரான ராகேஷ் ஜுன்ஜூன்வாலாவும் இதற்கான மிகச்சிறந்த உதாரணங்கள்.

பங்குச்சந்தை

ரூ.10 கோடி சொத்துமதிப்பைக் கொண்ட எளிய மனிதர்: 

இந்நிலையில் நம்மிடையே வாழும் எளிய மனிதர் ஒருவர் பங்குச்சந்தை மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியாகியிருப்பதாகக் கூறும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், தான் 27,855 L&T பங்குகள், 2475 அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் மற்றும் 4000 கர்நாடகா வங்கிப் பங்குகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். இன்றைய நிலவரப்படி இந்த பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கிறது. மேலும், இந்தப் பங்குகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் டிவிடெண்ட்டாக பெறுவதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொருட்படுத்தாமல், நல்ல பங்குகளில் முதலீடு செய்து பொறுமையாக இருப்பது எப்படி என்ற பாடத்தை இவரின் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

embed

சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி:

As they say, in Investing you have to be lucky once He is holding shares worth ₹80 crores L&T ₹21 crores worth of Ultrtech cement shares ₹1 crore worth of Karnataka bank shares. Still leading a simple life#Investing @connectgurmeet pic.twitter.com/AxP6OsM4Hq— Rajiv Mehta (@rajivmehta19) September 26, 2023