Loading...
அக்டோபர் ஜிஎஸ்டி வசூலில் சாதனை: மகாராஷ்டிரா முதலிடம், தமிழ்நாட்டில் மந்தமான வளர்ச்சி; முழு விவரம்
அக்டோபர் ஜிஎஸ்டி வசூலில் தமிழ்நாட்டில் மந்தமான வளர்ச்சி

அக்டோபர் ஜிஎஸ்டி வசூலில் சாதனை: மகாராஷ்டிரா முதலிடம், தமிழ்நாட்டில் மந்தமான வளர்ச்சி; முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2026
05:30 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சாதனை அளவாக ரூ. 2.31 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டின் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 23 சதவீத மிகவேகமான வளர்ச்சியாகும். இதன் மூலம் தொடர்ந்து நான்காவது மாதமாக அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. இறக்குமதி வரி வசூல் 42.2 சதவீதம் அதிகரித்து ரூ. 72,246 கோடியை எட்டியதே இந்த வரலாறு காணாத வளர்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.

நிகர வரி வருவாய்

வரி ரீஃபண்ட்கள் கழித்த பிறகான நிகர ஜிஎஸ்டி வருவாய் நிலவரம்

அக்டோபர் மாதத்தில் அரசு மொத்தம் ரூ. 27,934 கோடியை வரி ரீஃபண்டாக திரும்ப செலுத்தியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 6.5 சதவீதம் மட்டுமே அதிகம் என்பதால் அரசின் நிகர வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.

ரீஃபண்ட்களைக் கழித்த பிறகு அரசின் நிகர ஜிஎஸ்டி வருவாய் 25.6 சதவீதம் அதிகரித்து ரூ. 2.03 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஏப்ரல் - அக்டோபர்) மொத்த ஜிஎஸ்டி வசூல் 13.2 சதவீதம் அதிகரித்து ரூ. 14.78 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

மகாராஷ்டிரா முதலிடம் 

மாநிலங்கள் வாரியான வரி வசூலில் மகாராஷ்டிரா மற்றும் உ.பி சாதனை

மாநிலங்கள் வாரியான ஜிஎஸ்டி வசூலில் மகாராஷ்டிரா மாநிலம் ரூ. 35,150 கோடி வசூலித்து வழக்கம் போல் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 சதவீத வளர்ச்சியாகும்.

ஆனால் வளர்ச்சி விகிதத்தில் உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிராவை முந்தி 24 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 10,235 கோடியை வசூலித்துள்ளது.

மேலும் அசாம் மாநிலம் 47 சதவீத அதிவேக வளர்ச்சியுடன் ரூ. 1,934 கோடியையும், கர்நாடகா 18 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 15,922 கோடியையும் வசூலித்து சாதனை படைத்துள்ளன.

ADVERTISEMENT

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் மந்தமான வளர்ச்சி மற்றும் பிற மாநிலங்களின் நிலவரம்

தென்னிந்தியாவின் முக்கிய பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வளர்ச்சி வேகம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் வெறும் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ. 11,661 கோடியாக உள்ளது.

பிற மாநிலங்களில் குஜராத் ரூ. 13,516 கோடியும், டெல்லி ரூ. 9,298 கோடியும் வசூலித்துள்ளன.

அதேவேளையில், இமாச்சலப் பிரதேசம் மட்டுமே முந்தைய ஆண்டை விட 2 சதவீத சரிவைக் கண்டு ஜிஎஸ்டி வசூலில் வீழ்ச்சியடைந்த ஒரே மாநிலமாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT