Loading...
போன் பே முதல் கூகுள் பே வரை! விரைவில் UPI AutoPay-ஐ வேறு ஆப்பிற்கு சுலபமாக மாற்றலாம்
விரைவில் UPI AutoPay-ஐ வேறு ஆப்பிற்கு சுலபமாக மாற்றலாம்

போன் பே முதல் கூகுள் பே வரை! விரைவில் UPI AutoPay-ஐ வேறு ஆப்பிற்கு சுலபமாக மாற்றலாம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2026
06:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் யுபிஐ (UPI) சேவைகளை இயக்கி வரும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI), பயனர்களுக்குப் பயனுள்ள வகையில் இரண்டு முக்கியப் புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பயனர்கள் இனி தங்களது போன் பே, கூகுள் பே போன்ற டிஜிட்டல் கட்டண செயலிகளில் வைத்துள்ள ஓடிடி சந்தாக்கள், எஸ்ஐபி முதலீடுகள், கடன் தவணைகள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்களுக்கான யுபிஐ ஆட்டோபே' (UPI AutoPay) கட்டளைகளை ரத்து செய்யாமலேயே, வேறு செயலிகளுக்கு எளிதாகப் போர்ட் செய்து மாற்றிக் கொள்ள முடியும்.

சிரமங்கள் குறைப்பு

பயனர்களின் சிரமங்களைக் குறைக்கும் புதிய தொழில்நுட்ப மாற்றம்

தற்போது வரை பயனர்கள் ஒரு செயலியில் இயங்கும் ஆட்டோபே சேவையை நிறுத்த வேண்டுமென்றால், பழைய செயலியில் உள்ள ஆட்டோபே கட்டளையை முழுமையாக ரத்து செய்துவிட்டு, புதிய செயலியில் மீண்டும் முதலிலிருந்து பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், எம்பிசிஐ கொண்டுவரவுள்ள புதிய மாற்றத்தின் மூலம் பழைய கட்டளையை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்த புதிய வசதியானது பயனர்கள் விரும்பும் டிஜிட்டல் கட்டண செயலிகள் வழியே தங்களின் தகுதியான ஆட்டோபே சேவைகளை எளிதாக அணுகவும், நிர்வகிக்கவும் வழிவகுக்கும்.

வணிகள்

வணிகர்களுக்கும் ஆட்டோபே மாற்றும் வசதி

பயனர்களுக்கு மட்டுமின்றி, வணிகர்களுக்கும் இதில் ஒரு புதிய வசதி வழங்கப்படவுள்ளது.

அதன்படி, வணிகர்கள் தங்களின் தற்போதைய ஆட்டோபே கட்டளைகளை ஒரு கட்டண நுழைவாயிலிலிருந்து மற்றொரு கட்டண நுழைவாயிலுக்கோ அல்லது வேறு வங்கிக்கோ எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் ஆட்டோபே சேவையை மீண்டும் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

இது வணிகர்களின் கட்டண விநியோக முறையை மேலும் திறம்பட செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

குளோபல் ஃபின்டெக் விழா 2026

மும்பை குளோபல் ஃபின்டெக் விழா 2026ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் வரும் செப்டம்பர் 8 முதல் 11 வரை நடைபெறவுள்ள குளோபல் ஃபின்டெக் விழா 2026 நிகழ்வின் போது இந்த புதிய யுபிஐ வசதிகளை NPCI அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.

ஆட்டோபே சேவைகளை வேறு ஆப்பிற்கு மாற்றினாலும், பயனரின் அசல் வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே பணம் தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும்.

இந்த புதிய அம்சம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT