
நாங்க சம்பளம் தர மாட்டோம்..நீங்க தான் ரூ.20 லட்சம் கொடுக்கணும்: சோமாட்டோ அறிவித்த புதிய வேலை வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ, ஒரு புதிய தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை, நிறுவனத்தின் சி.இ.ஓ. தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ, அந்த ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோயல் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில புதுவிதமான நிபந்தனைகளும் அவர் வெளியிட்டுள்ளார். அதுவே தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Update: I am looking for a chief of staff for myself. pic.twitter.com/R4XPp3CefJ
— Deepinder Goyal (@deepigoyal) November 20, 2024
வேலை வாய்ப்பு
"வேலையில் சேர வேண்டுமானால் சில கண்டிஷன் உண்டு": கோயல் பட்டியலிட்ட வினோத கண்டிஷன்கள்
முதலில், இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது.
மேலும், வேலையில் சேரும் நபரே ரூ.20 லட்சம் என்ற தொகையை FEEDING INDIA அமைப்புக்கு கொடுக்க வேண்டும்.
இரண்டாவது ஆண்டு முதல், வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்படும். மேலும், அவர் தேர்வு செய்யும் ஏதேனும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அளவு நிதியுதவி நிர்வாகமே வழங்கும்.
தீபிந்தர் கோயல் இந்த நிபந்தனைகளை தெளிவுபடுத்தும்போது,"இது வழக்கமான வேலை வாய்ப்புகள் அல்ல. விண்ணப்பிப்பவர்களுக்கு ஊதியம் பெறுவது நோக்கமாக இருக்கக் கூடாது. இங்கு முக்கியமானது கற்றல் வாய்ப்புகள்" என்றார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது, "தேர்வு செய்யப்பட்டவர்கள் பிளின்கிட், ஹைபர்ப்யூர் மற்றும் பீடிங் இண்டியா போன்றவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவர்."