Page Loader
பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY
இன்று சுமார் 3:15 மணியளவில், 179 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த NIFTY 20,000த்தை தாண்டியது.

பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY

எழுதியவர் Sindhuja SM
Sep 11, 2023
03:54 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய பங்குச் சந்தையின்(NSE) முதன்மைக் குறியீடான NIFTY, முதல்முறையாக 20,000 புள்ளிகளை எட்டி வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் பாம்பே பங்குச் சந்தை(BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE) என்ற இரண்டு பங்கு சந்தைகள் இருக்கின்றன. இதில், பாம்பே பங்குச் சந்தையின் குறியீடு SENSEX என்றும், தேசிய பங்குச் சந்தையின் முதன்மைக் குறியீடு NIFTY என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முதன்மையான 50 நிறுவனங்களின் கூட்டு பங்குகள் தான் NIFTY ஆகும். NIFTY எந்த அளவு உயர்கிறதோ அந்த அளவு தேசிய பங்குச் சந்தையின் மதிப்பு அதிகரித்துள்ளது என்று அர்த்தம் கொள்ளலாம். இந்நிலையில், இன்று சுமார் 3:15 மணியளவில், 179 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த NIFTY 20,000த்தை தாண்டியது.

திலகம்வ்க்

கடந்த வாரத்தில் இருந்தே, பங்கு சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது 

தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முதன்மையான 50 நிறுவனங்களின் பங்குகள் வலுவாக உயர்ந்ததை அடுத்து, NIFTYயின் புள்ளிகள் 20,000த்தை தாண்டின. கடந்த ஜூலை மாதம், NIFTY இந்த சாதனையை ஒரு சிறு மயிரிழையில் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலையில், NIFTY 50 வலுவான மேல்நோக்கு பாதையில் இருந்ததால், 20,000 புள்ளிகளை NIFTY அப்போதே எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், மார்ச் 2023இல் இருந்து 15 சதவீத வளர்ச்சியை NIFTY பதிவு செய்துள்ளது. ஆனால், பலவீனமான உலக பொருளாதாரம் மற்றும் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களால், 20,000 புள்ளிகளை NIFTY எட்டுவது தாமதமாகியது. கடந்த வாரத்தில் இருந்தே, பங்கு சந்தையில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. SENSEX மற்றும் NIFTY இரண்டும் கடுமையாக உயர்ந்துள்ளன.