Page Loader
இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்துகிறது Netflix; ஒரு குடும்பத்திற்குள் மட்டுமே கணக்கு பகிரவேண்டும்
இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்துகிறது Netflix

இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்துகிறது Netflix; ஒரு குடும்பத்திற்குள் மட்டுமே கணக்கு பகிரவேண்டும்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 20, 2023
01:13 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல ஓடிடி தளமான Netflix நிறுவனம், ஏற்கனவே அறிவித்திருந்தது போல, இந்தியாவில், கடவுசொல் பகிர்வை (Password Sharing) நிறுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே, அதாவது கடந்த மே மாதம், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இது சார்ந்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியானதும், உலகம் முழுவதும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் குறைந்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இன்று முதல், இந்தியாவில், கடவுச்சொல் பகிர்வை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதோடு, ஒரு கணக்கை, ஒரு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அறிவித்தது. இந்த புதிய விதிக்கு பிறகு, இந்த நிறுவனத்திற்கு மேலும் 6 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

card 2

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் அறிக்கை 

"அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் எங்கிருந்தாலும் - வீட்டில், பயணத்தின்போது, ​​விடுமுறையில் - Netflix ஐப் பயன்படுத்தலாம் மற்றும் Transfer Profile மற்றும் Manage Access and Devices போன்ற புதிய அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று அந்த நிறுவனமானது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்காக அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு, விலாவரியாக மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் பிரேசில் உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கடவுச்சொல் பகிர்வுக்கான கட்டுப்பாடுகளை மே மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்தது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். இந்தியாவில் இப்போதுதான் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.