'ஊதியம் வழங்க படும் பாடு': பைஜூஸ் நிறுவனர் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம்
செய்தி முன்னோட்டம்
நிதி சவால்களுக்கு மத்தியில், எட்டெக் நிறுவனமான பைஜுஸ் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளத்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து நிறுவனர் பைஜு ரவீந்திரன் ஊழியர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான கடிதத்தை எழுதியுள்ளார்.
மேலும், தனது கடினமான காலங்களில் ஊழியர்கள் தரும் ஆதரவிற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவதற்காக பைஜுஸின் நிறுவனர் மற்றும் அவரது குடும்பம் தங்களது வீட்டை அடகு வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஊதியம் வழங்கவதற்காக நான் பல மாதங்களாக மலைகளை நகர்த்தி வருகிறேன். இந்த முறை, நீங்கள் சரியான முறையில் சம்பளம் பெறுவதை உறுதி செய்வதற்கான போராட்டம் இன்னும் பெரியது" என்று பைஜு ரவீந்திரன் கூறியுள்ளார்.
பைஜூஸ்
'ஒவ்வொரு புயலையும் சமாளிப்போம்': பைஜு ரவீந்திரன்
"எல்லோரும் தியாகங்களைச் செய்திருக்கிறோம். எல்லோரும் தாங்கள் எடுக்க விரும்பாத முடிவுகளைப் எடுத்திருக்கிறோம். இந்த போரில் எல்லோரும் கொஞ்சம் சோர்வாக இருக்கிறார்கள். ஆனால் யாரும் கைவிடவில்லை," என்று ரவீந்திரன் மேலும் கூறினார்.
"என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட எனக்கு எதுவும் முக்கியமில்லை. நான் உங்களுக்காக போராடுகிறேன். நீங்கள் என்னுடன் சேர்ந்து போராடுங்கள். ஒவ்வொரு புயலையும் சமாளிக்க எனக்கு உதவிய புனிதமான உறவு இதுதான்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிறுவனத்திற்கு வந்த பிரச்சனைகள் எல்லாம் விரையில் தீரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.