
18 மாதங்களில் நான்காவது பணிநீக்கம்: மைக்ரோசாப்ட் அடுத்த வாரம் அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாம்
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றொரு சுற்று பணி நீக்கங்களைத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை, அதன் நிதியாண்டு முடிவதற்குள் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அதன் X-box பிரிவை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களில் இது நிறுவனத்தில் நான்காவது பெரிய பணிநீக்கமாக இருக்கலாம். மேலும் 2023 ஆம் ஆண்டில் Activision Blizzard-ஐ $69 பில்லியனுக்கு கையகப்படுத்திய பிறகு, லாபத்தில் கவனம் செலுத்த Microsoft நிறுவனத்திற்கு அதிகரித்து வரும் அழுத்தத்தின் மத்தியில் இந்த பணிநீக்க நடவடிக்கை வருகிறது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள், இந்த பணிநீக்கங்கள் X-box குழுமத்திற்குள் உள்ள பல அணிகளைப் பாதிக்கும் என்று ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்துள்ளன.
பாதிப்பு
கணிசமான அணிகளை பாதிக்கும் ஆட்குறைப்பு
ஜூன் 30 அன்று மைக்ரோசாப்டின் நிதியாண்டு முடிவடைவதற்கு சற்று முன்பு, அடுத்த வார தொடக்கத்தில் பணிநீக்கங்கள் அறிவிக்கப்படும். Microsoft பொதுவாக பெரிய உள் மாற்றங்களைச் செய்து, துறைகள் முழுவதும் குழுக்களை மறுசீரமைக்கும் காலம் இது. மைக்ரோசாப்டின் கேமிங் கன்சோல்கள், கேம் டெவலப்மென்ட் ஸ்டுடியோக்கள் மற்றும் கேம் பாஸ் போன்ற டிஜிட்டல் சேவைகளைக் கையாளும் எக்ஸ்பாக்ஸ் பிரிவு, கடந்த ஆண்டில் ஏற்கனவே பல பணிநீக்கங்களைக் கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும், மைக்ரோசாப்ட் அதன் சில கேமிங் துணை நிறுவனங்களை மூடிவிட்டு, எக்ஸ்பாக்ஸுக்குள் பெரிய பணியாளர் மாற்றங்களைச் செய்தது.