குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவியும், சமூக ஆர்வலருமான மிச்செல் ஒபாமா, அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த கருதரங்கங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். தற்போது, அதை சார்ந்த ஒரு புதிய தொழிலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். PLEZi நியூட்ரிஷன் என பெயர் கொண்ட அந்த பிராண்ட், குழந்தைகளுக்கான குறைந்த சர்க்கரை, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் எனவும், மிச்செல் ஒபாமா அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஆலோசகராக பணிபுரிவதாக செய்திகள் கூறுகின்றன. அந்த நிறுவனத்தின் கூற்றுபடி, PLEZi இன் முதல் தயாரிப்பு ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஒரு பானமாகும்.