NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு
    ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கம் செய்ய முடிவு

    ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2024
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிப்பு நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

    நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக, தொடக்கத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் உள்ளூர் பொறியாளர்களை 2026ஆம் ஆண்டிற்குள் பணியமர்த்தும் மற்றும் பயிற்சியளிக்கும் திட்டத்தை டோக்கியோ எலக்ட்ரான் சிஇஓ டோஷிகி கவாய் வெளிப்படுத்தியுள்ளார்.

    கவாய் அவர்களின் செயல்பாடுகளில் ரோபாட்டிக்ஸ் அதிகரித்து வரும் பங்கை வலியுறுத்தினார்.

    மேலும் உள்ளூர் குழு ஜப்பானில் இருந்து ஆன்-சைட் மற்றும் ரிமோட் உதவி இரண்டையும் பெறும் என்று உறுதியளித்தார்.

    சிப் தயாரிப்பு

    சிப் தயாரிப்பை அதிகரிக்கும் இந்தியாவின் திட்டம்

    செமிகண்டக்டர் உற்பத்தியில் மேம்பட்ட பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுடனான தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகளாவிய மின்னணு நிறுவனங்கள் மற்றும் சிப்மேக்கர்களை ஈர்க்கும் இந்தியாவின் திட்டத்துடன் இந்த விரிவாக்கம் இணைந்துள்ளது.

    ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தங்கள் உற்பத்தி திறன்களை மேம்படுத்தி வருகின்றன.

    அதே நேரத்தில் டாடா குழுமம் போன்றவை செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளில் அதிக முதலீடு செய்கின்றன.

    இந்நிலையில், தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், எஸ்கே ஹைனிக்ஸ் மற்றும் இன்டெல் கார்ப்பரேஷன் போன்ற ஜாம்பவான்களுக்கு முக்கிய சப்ளையரான டோக்கியோ எலக்ட்ரான் இந்தியாவில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

    சந்தை பின்னடைவு

    அமெரிக்க-சீனா தொழில்நுட்ப பதட்டங்களுக்கு மத்தியில் டோக்கியோ எலக்ட்ரானின் அர்ப்பணிப்பு 

    செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள் மற்றும் ஆற்றல் திறன் மற்றும் கார்பன் நடுநிலையை நோக்கிய மாற்றம் காரணமாக 2030ஆம் ஆண்டளவில் ஒட்டுமொத்த சிப் தேவை இரட்டிப்பாகும் என்று கவாய் கணித்துள்ளார்.

    சீனாவிற்கு மேம்பட்ட சிப்மேக்கிங் கருவிகளை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜப்பான் மீது அமெரிக்க அழுத்தம் இருந்தபோதிலும், சிப்மேக்கிங் இயந்திரங்களுக்கான உலகளாவிய தேவை குறித்து கவாய் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

    புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியிலும் கூட, அதன் விரிவாக்கத் திட்டங்களில் டோக்கியோ எலக்ட்ரானின் உறுதிப்பாட்டை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    இந்த மாத தொடக்கத்தில், டோக்கியோ எலக்ட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸின் பணியாளர்களுக்கு சிப்மேக்கிங் கருவிகளில் பயிற்சி அளிப்பதாகவும், அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகவும் அறிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    இந்தியா
    முதலீடு
    வர்த்தகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜப்பான்

    சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள் பிலிப்பைன்ஸ்
    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம் பிலிப்பைன்ஸ்
    கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு  கார்த்தி
    இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ  குஜராத்

    இந்தியா

    ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல் திரௌபதி முர்மு
    42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள் மேற்கு வங்காளம்
    நெய்யின் தரத்தை சோதிக்க ரூ.75 லட்சத்தில் நவீன ஆய்வகம்; திருப்பதி தேவஸ்தானம் முடிவு திருப்பதி
    அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம் அமெரிக்கா

    முதலீடு

    பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர்  பங்குச் சந்தை
    இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன் ஸ்டார்ட்அப்
    எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க சீன நிறுவனமான SAICயுடன் கைகோர்க்கும் இந்திய JSW குழுமம் எம்ஜி மோட்டார்
    புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு

    வர்த்தகம்

    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு இந்தியா
    ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன் தமிழ்நாடு
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025