சவுதி அரேபியாவுக்கான இண்டிகோ விமான சேவைகள் நவம்பர் 30 வரை ரத்து; பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டின் முக்கிய நகரங்களான ஜெத்தா, மதீனா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்து விமானச் சேவைகளையும் நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இண்டிகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வழங்கிய தொடர்பு விவரங்கள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நிலவரம் தொடர்ந்து கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளின் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களது மிக உயர்ந்த முன்னுரிமை என்றும் இண்டிகோ வலியுறுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Travel Advisory
— IndiGo (@IndiGo6E) November 18, 2026
In view of the prevailing security situation in the Kingdom of Saudi Arabia, all flights to and from Jeddah, Madinah, Riyadh and Dammam have been cancelled until 30 November 2026 (inclusive).
Affected customers are being informed through the contact details…