
டிரம்ப் என்னத்த சொல்றது... இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கப்பட்டு வருவது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சை வெடித்துள்ளது.
எனினும், ஆப்பிள் நிறுவனம் அதன் தொடர்ச்சியான முதலீடு மற்றும் இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டை இந்திய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக சிஎன்பிசி-டிவி18 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியா சார்பான உற்பத்தித் திறனில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
முன்னதாக, டோஹாவில் நடந்த ஒரு நிகழ்வின் போது, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை விமர்சித்த டிரம்ப், இந்தியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நிறுவனத்தின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப் பேசியது என்ன?
"நீங்கள் இந்தியாவில் கட்டுவதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. நீங்கள் இங்கே அமெரிக்காவில் கட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இந்தியா பூஜ்ஜிய வரிகள் உட்பட மிகவும் சாதகமான முதலீட்டு சூழலை வழங்குகிறது என்பதை ஒப்புக்கொண்ட போதிலும் அவர் இதைக் கூறினார்.
இதற்கிடையே, இந்தியாவில் உள்ள தொழில்துறை தலைவர்கள் இந்த கவலைகளை முன்கூட்டியே நிராகரித்துள்ளனர்.
ELCINAவின் பொதுச் செயலாளர் ராஜூ கோயல், டிரம்பின் கருத்துக்கள் வேகத்தை சிறிது நேரம் குறைக்கக்கூடும் என்றாலும், அவை இந்தியாவின் போக்குக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று வலியுறுத்தினார்.
ஆப்பிளின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு முக்கியமான உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது.