
ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா: ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் பர்னிச்சர் நிறுவனமான ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு ஏற்பட்டதை அடுத்து, அந்த நிறுவனம் தனது தொழிலாளிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது.
ஸ்வீடிஷ் பர்னிச்சர் நிறுவனமான ஐக்கியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள அதன் ஊழியர்கள் வேலையைவிட்டு அதிகம் வெளியேறுவதால், அதை சமாளிக்க போராடி வருகிறது.
அந்த நிறுவனம் பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் 62,000 தொழிலாளர்களை இழந்து வருகிறது.
அதன் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இப்படி வேலையை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
இதனால், ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு ஏற்பட்டது.
ஐக்கியா
பணியாளர் வெளியேறுவாதை குறைப்பதற்கு பின்பற்றப்பட உத்திகள்
இந்த சிக்கலை தீர்க்க, அந்த நிறுவனம் தொழிலாளர் திருப்தி மற்றும் தக்கவைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
கொரோனா தொற்றுக்கு பிறகு, தொழிலாளர்களுக்கு திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐக்கியாவின் தாய் நிறுவனமான இன்டெர் ஐக்கியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஆபிரஹாம்சன் ரிங் தெரிவித்துள்ளார்.
இதை சமாளிக்க, ஐக்கியா ஆனது தனது ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியதோடு, முன்னணி தொழிலாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தியது.
மேலும், ஊழியர்களுக்கு வேலை சுமையை குறைக்க புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனால், மூன்றில் ஒன்றாக இருந்த பணியாளர்கள் வெளியேறும் விகிதம் அமெரிக்காவில் கால்வாசியாக குறைந்தது.