50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ
ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் படி, இந்திய மக்களின் சேமிப்பு அளவுகள், நாளுக்கு நாள் குறைந்து, 2023 ஆம் நிதியாண்டில், இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு மொத்த ஜிடிபி-யில் வெறும் 5.1 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதீத வீழ்ச்சி என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனினும் சென்ற ஆண்டு, அதன் அளவு 7.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, தனிநபர் வருமானம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் குடும்பங்களின் சேமிப்பு அளவும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தற்போது வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இந்த சேமிப்பு விகிதத்தின் காரணம் என்ன? கோவிட் காலத்திற்கு பிறகு, நுகர்வு அதிகரித்ததற்கு சரிசமமாக வருமானம் உயர்த்தப்படவில்லை என்பதே.