
விமானம் ரத்து, தாமதம் குறித்து விஸ்தாராவிடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது
செய்தி முன்னோட்டம்
விமானம் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விஸ்தாராவிடம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது என்று ANI கூறியுள்ளது.
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விஸ்தாரா, கடந்த வாரத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்திருக்கிறது, தாமதப்படுத்தியுள்ளது.
இந்த விமான ரத்து மற்றும் நீண்ட தாமதங்கள் குறித்து விரிவான அறிக்கையை விஸ்தாராவிடம் தற்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) கோரியுள்ளது.
முன்னதாக திங்களன்று விஸ்தாரா நிறுவனம் வெளியிட அதிகாரபூர்வ அறிக்கையில்,"கடந்த சில நாட்களாக பல்வேறு செயல்பாட்டு காரணங்களால் விமானம் ரத்து மற்றும் தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறோம். நிலைமையை சீராக்க எங்கள் குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன. சிரமத்திற்கு வருந்துகிறோம்"
ட்விட்டர் அஞ்சல்
மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது
#NewsAlert 🚨 Ministry of Civil Aviation (MoCA) sought a detailed report from Vistara regarding flight cancellations and major delays, with the airline having cancelled or delayed over 100 flights in the past week.#Vistara #Aviation | @airvistara pic.twitter.com/EfSSY9sO1B
— Moneycontrol (@moneycontrolcom) April 2, 2024