Page Loader
Fact Check: ₹2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்
யுபிஐ பரிவர்த்தனைகள்

Fact Check: ₹2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 19, 2025
08:37 am

செய்தி முன்னோட்டம்

ரூ.2,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க திட்டமிட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) நிராகரித்தது. நிதி அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், "அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை" என்று தெளிவுபடுத்தியது. இந்த அறிக்கைகள் "முற்றிலும் தவறானவை, தவறாக வழிநடத்தும் மற்றும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை" என்று கூறியது. அதிக மதிப்புள்ள யுபிஐ கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பரவிய ஊடக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தெளிவுபடுத்தல் வந்தது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி யாருக்கு பொருந்தும்? 

இந்தக் கூற்றுக்களை நிவர்த்தி செய்யும் வகையில், வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) போன்ற கட்டணம் தொடர்பானவற்றுக்கு மட்டுமே ஜிஎஸ்டி பொருந்தும் என்று அமைச்சகம் வலியுறுத்தியது. இது தற்போது தனிநபர் டு வணிக (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படவில்லை. ஜனவரி 2020 முதல் இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கான எம்டிஆரை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நீக்கியது, இதன் விளைவாக, தற்போது யுபிஐ பரிவர்த்தனைகள் ஜிஎஸ்டிக்கு உட்பட்டவை அல்ல. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. குறிப்பாக யுபிஐ மூலம் டிஜிட்டலில் பணம் அனுப்புவதை மக்கள் ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அது மேலும் கூறியது.

ட்விட்டர் அஞ்சல்

மத்திய நிதியமைச்சகத்தின் எக்ஸ் தள பதிவு