LOADING...
வாரத்தின் முதல் நாளே விலையேற்றமா? தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்! இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளே விலையேற்றமா? தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்! இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 27, 2026
11:09 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 27) மீண்டும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 அதிகரித்து ₹14,230 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 அதிகரித்து ₹1,13,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹33 அதிகரித்து ₹15,524 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹264 அதிகரித்து ₹1,24,192 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹20 குறைந்து ₹11,870 ஆகவும், ஒரு சவரன் ₹160 அதிகரித்து ₹94,960 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹270.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement