LOADING...
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - ஒரு கிராம் ரூ.9,000ஐ நெருங்கியது!
இந்திய சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - ஒரு கிராம் ரூ.9,000ஐ நெருங்கியது!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 18, 2025
11:08 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா-சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் பதட்டங்களுக்கு இடையே சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.25 உயர்ந்து ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.200 உயர்ந்து ரூ.71,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.44 உயர்ந்து ரூ.9044-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ.216 உயர்ந்து, சவரன் ஒன்று ரூ.77,848 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.109.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post