
அட்சய திருதியையில் தங்கம் வாங்கத் திட்டமா? சென்னையில் விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
அட்சய திருதியை தினமான இன்று, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ.8,980 மற்றும் சவரனுக்கு ரூ.71,840 ஆக விற்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
ஏப்ரல் 28ஆம் தேதி கிராமுக்கு ரூ.8,940 ஆக விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, அதற்கடுத்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதி ரூ.40 உயர்ந்து, கிராமுக்கு ரூ.8,980 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இன்று அட்சய திருதியை என்பதால் மாநிலம் முழுவதும் சுமார் 35,000 நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.
நகை வியாபாரிகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 20% வரை கூடுதல் விற்பனை நடக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க குவிந்த மக்கள்.
— Sun News (@sunnewstamil) April 30, 2025
கோவையில் அதிகாலை 5 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.#SunNews | #AkshayaTritiya2025 | #Kovai pic.twitter.com/rR0O0v7M1x