Page Loader
வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை; சவரன் ரூ.59 ஆயிரத்தை எட்டியது
தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை; சவரன் ரூ.59 ஆயிரத்தை எட்டியது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2024
12:37 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.8,294-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.66,357ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.2 உயர்ந்து ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post