தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்; தொடர்ந்து மூன்றாவது நாளாக குறையும் சவரன் விலை
செய்தி முன்னோட்டம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (செப்டம்பர் 23), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹14,135 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,13,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹55 குறித்து ₹15,420 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹440 குறைந்து ₹1,23,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.
அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹50 குறைந்து ₹11,905 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹95,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹255 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,55,000 ஆக விற்கப்படுகிறது.