மே மாதத்தின் முதல் நாள் விலை ஏற்றமா? இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மே 1) சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹14,050 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,12,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 குறைந்து ₹15,328 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 குறைந்து ₹1,22,624 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று (மே 1) குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹25 குறைந்து ₹11,750 ஆகவும், ஒரு சவரன் ₹200 குறைந்து ₹94,000 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹265.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.