LOADING...
நகை வாங்க திட்டமிட்டவர்கள் குஷி! தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்க விலை சரிவு; இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்கள் குஷி! தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்க விலை சரிவு; இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 06, 2026
10:14 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹160 குறைந்து ₹14,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,280 குறைந்து ₹1,19,680 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹174 குறைந்து ₹16,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,392 குறைந்து ₹130,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹130 குறைந்து ₹13,030 ஆகவும், ஒரு சவரன் ₹1,040 குறைந்து ₹1,04,240 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹290.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement