Loading...
அதிரடியாக குறையும் தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?
தங்கத்தின் விலை, நேற்று மாலை இருந்த விலையிலேயே தொடர்கிறது.

அதிரடியாக குறையும் தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2026
11:57 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, நேற்று மாலை இருந்த விலையிலேயே தொடர்கிறது. அதன்படி, செவ்வாய்கிழமை (செப்டம்பர் 29), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹13,665 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,09,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹14,908 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,19,264 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் வீழ்ச்சி

18 காரட் தங்கத்தின் விலையும் நேற்று மாலை இருந்த விலையிலேயே தொடர்கிறது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹11,435 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹91,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹0.10 பைசா குறைந்து ₹244.90 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ வெள்ளி ₹2,44,900 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT