Loading...
தொடர்ந்து நான்காவது நாளாக கிடுகிடு உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தொடர்ந்து நான்காவது நாளாக கிடுகிடு உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2026
10:10 am

செய்தி முன்னோட்டம்

இந்த வார தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, இன்று நான்காவது நாளாக மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (நவம்பர் 5), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹285 அதிகரித்து ₹13,385 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,280 அதிகரித்து ₹1,07,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹311 அதிகரித்து ₹14,602 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,488 அதிகரித்து ₹1,16,816 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹220 அதிகரித்து ₹10,955 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,760 அதிகரித்து ₹87,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹210.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,10,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT