Loading...
ஒரே நாளில் சவரனுக்கு ₹3,760 வீழ்ச்சி; ₹90,000-ஐ நெருங்குகிறது ஆபரண தங்கத்தின் விலை; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஒரே நாளில் சவரனுக்கு ₹3,760 வீழ்ச்சி; ₹90,000-ஐ நெருங்குகிறது ஆபரண தங்கத்தின் விலை; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2026
10:23 am

செய்தி முன்னோட்டம்

தொடர்ந்து இரண்டாவது வாரமாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று மேலும் சரிந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (நவம்பர் 20), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹470 குறைந்து ₹11,510 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3,760 குறைந்து ₹92,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹512 குறைந்து ₹12,557 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹4,096 குறைந்து ₹1,00,456 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் வீழ்ச்சி

18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹385 குறைந்து ₹9,420 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3,080 குறைந்து ₹75,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் சரிந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹175.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,75,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT