Page Loader
தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை; இதுதான் சரியான நேரம்!
தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை; இதுதான் சரியான நேரம்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2024
11:22 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை 10 நாட்களாக குறைந்து வருகிறது. அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கம் கிராம் ஒன்று ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.7,045க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,685ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.61,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து கிராம் ஒன்று ரூ.101-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post