LOADING...
மத்திய கிழக்கு போருக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
மத்திய கிழக்கு போருக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகள் சரிவு

மத்திய கிழக்கு போருக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 02, 2026
10:11 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 2) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹115 குறைந்து ₹15,660 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹920 குறைந்து ₹1,25,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹125 குறைந்து ₹17,084 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,000 குறைந்து ₹1,36,672 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹100 குறைந்து ₹13,400 ஆகவும், ஒரு சவரன் ₹800 குறைந்து ₹1,07,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹315.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,15,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement