LOADING...
தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது; இன்றைய விலை நிலவரம்
தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது

தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது; இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2026
11:26 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை (ஜூன் 3) தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி, புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹14,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,16,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹15,818 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,26,544 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை அதிகரிப்பு

18 காரட் தங்கத்தின் விலையும் மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹12,180 ஆகவும், ஒரு சவரன் ₹97,440 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையில் சற்று மாற்றம் உள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹290 ஆகவும், ஒரு கிலோ ₹2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement