தங்கம் வாங்க சரியான நேரம்; ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்து உள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.30 குறைந்து ரூ.6,385க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.6,840-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.54,720ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து கிராம் ஒன்று ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.