Page Loader
ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் ரூ.280 உயர்ந்தது

ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் ரூ.280 உயர்ந்தது

எழுதியவர் Sindhuja SM
Jul 21, 2024
01:09 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.54,720ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,462-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,696ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று, ரூ.97.65க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் 

கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,805ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 35 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ரூ.54,440க்கு விற்கபட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.280 உயர்ந்து ரூ.54,720க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,424க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 38 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ரூ.59,392க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.304 உயர்ந்து ரூ.59,696க்கு விற்கப்பட்டு வருகிறது.