இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 31
எழுதியவர்
Venkatalakshmi V
Jan 31, 2024
10:46 am
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,320ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி, கிராம் ஒன்று ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு#SunNews | #Chennai | #Gold pic.twitter.com/uD5CjcM7Sf
— Sun News (@sunnewstamil) January 31, 2024