Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 21

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 21

எழுதியவர் Sindhuja SM
Jan 21, 2024
12:59 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.5,825க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,355ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,840ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிக்லசை 

கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் 

கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,845ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 20 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரம், ரூ.46,760க்கு விற்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.160 குறைந்து ரூ.46,600க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,376க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 21 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரம், ரூ.51,008க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.168 குறைந்து ரூ.50,840க்கு விற்கப்பட்டு வருகிறது.