மீண்டும் மீண்டுமா? இன்று சவரனுக்கு ₹1,600 உயர்ந்தது தங்கம் விலை
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹200 அதிகரித்து ₹14,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,600 அதிகரித்து ₹1,16,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹218 அதிகரித்து ₹15,927 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,744 அதிகரித்து ₹1,27,416 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.
அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹200 அதிகரித்து ₹12,380 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,600 அதிகரித்து ₹99,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹260 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,60,000 ஆக விற்கப்படுகிறது.