Loading...
மூன்று நாள் விலையேற்றத்திற்குப் பின் கடும் வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

மூன்று நாள் விலையேற்றத்திற்குப் பின் கடும் வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2026
10:14 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹180 குறைந்து ₹14,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,440 குறைந்து ₹1,12,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹196 குறைந்து ₹15,317 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,568 குறைந்து ₹1,22,536 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹180 குறைந்து ₹11,820 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,440 குறைந்து ₹94,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹255 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,55,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT