Loading...
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை உயர்வு
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2026
10:29 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹20 அதிகரித்து ₹14,220 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹160 அதிகரித்து ₹1,13,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹22 அதிகரித்து ₹15,513 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹176 அதிகரித்து ₹1,24,104 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹20 அதிகரித்து ₹12,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹160 அதிகரித்து ₹96,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலை மாற்றமின்றி தொடர்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹260 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,60,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT