LOADING...
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 26
தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 26

எழுதியவர் Venkatalakshmi V
Apr 26, 2024
10:38 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.45 உயர்ந்து ரூ.6,755க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.360 உயர்ந்து ரூ.54,040ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,225ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.88.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

தங்கம் வெள்ளி விலை

#BREAKING | ₹54,000 ஐ கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை #SunNews | #Chennai | #GoldRate pic.twitter.com/fNkLVru8t2— Sun News (@sunnewstamil) April 26, 2024