இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 23
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.145 குறைந்து, ரூ.6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.1,160 குறைந்து ரூ.53,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,170ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ. 2.50 குறைந்து ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் வெள்ளி விலை
🔴#BREAKING | ஒரே நாளில் 1,000 ரூபாய்க்கு மேல் சரிந்த தங்கத்தின் விலை! சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,160 ரூபாய் குறைந்து, 53,600 ரூபாய்க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700 ஆக விற்பனை#GoldPrice | #Chennai | #SparkMedia pic.twitter.com/O5KjL37ROj— Spark Media (@SparkMedia_TN) April 23, 2024