LOADING...
ஏறிய வேகத்தில் தடாலடியாக இறங்கிய தங்கம் விலை; சவரனுக்கு ₹1,200 சரிவு
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஏறிய வேகத்தில் தடாலடியாக இறங்கிய தங்கம் விலை; சவரனுக்கு ₹1,200 சரிவு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 17, 2026
10:20 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹150 குறைந்து ₹14,210 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,200 குறைந்து ₹1,13,680 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹164 குறைந்து ₹15,502 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,312 குறைந்து ₹1,24,016 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹120 குறைந்து ₹11,860 ஆகவும், ஒரு சவரன் ₹960 குறைந்து ₹94,880 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹275.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,75,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement