மூன்று நாள் இறக்கத்திற்குப் பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 19) அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹270 அதிகரித்து ₹14,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,160 அதிகரித்து ₹1,16,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹294 அதிகரித்து ₹15,818 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,352 அதிகரித்து ₹1,26,544 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் உயர்வு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹220 அதிகரித்து ₹12,400 ஆகவும், ஒரு சவரன் ₹1,760 அதிகரித்து ₹99,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 அதிகரித்து, ₹270.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.