நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிம்மதி; இன்றைய விலை நிலவரம் இதுதான்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 குறைந்து ₹14,420 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 குறைந்து ₹1,15,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹87 குறைந்து ₹15,731 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹696 குறைந்து ₹1,25,848 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹50 குறைந்து ₹12,350 ஆகவும், ஒரு சவரன் ₹400 குறைந்து ₹98,800 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹270.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.