Loading...
மீண்டும் தடாலடியாக சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

மீண்டும் தடாலடியாக சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2026
10:16 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹155 குறைந்து ₹13,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,240 குறைந்து ₹1,04,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹169 குறைந்து ₹14,226 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,352 குறைந்து ₹1,13,808 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹129 குறைந்து ₹10,667 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,032 குறைந்து ₹85,336 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹210.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,10,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT